கயத்தாறில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 01st April 2019 02:13 AM | Last Updated : 01st April 2019 02:13 AM | அ+அ அ- |

கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம், கடம்பூர் காசநோய் அலகின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவர் திலகவதி தலைமை வகித்தார். காசநோயாளிகள் சிகிச்சையின்போது தினமும் எடுக்க வேண்டிய உணவு முறைகள், தொடர் சிகிச்சைகள் குறித்துப் பேசினார்.
சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் பேசுகையில், காசநோயின் அறிகுறிகள், காசநோயாளிகளுக்கு பொது சுகாதாரம் ஆகியவை குறித்து விளக்கினார். இதில், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசிவிஸ்வநாதன், செவிலியர் ஆதிமகேஸ்வரி, மருத்துவமனை பணியாளர் செல்லத்தாய் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.