சொத்துப் பிரச்னையில் தகராறு: ஒருவர் கைது
By DIN | Published On : 01st April 2019 02:13 AM | Last Updated : 01st April 2019 02:13 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே சொத்துப் பிரச்னையால் சகோதரர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டியை அடுத்த அய்யனேரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் சரவணப்பாண்டியன்(48). இவரது, சகோதரர் கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (42). இவர்களுக்கு இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரவணப்பாண்டியன், தோட்டத்துக்கு செல்வதற்காக சென்றாராம். அப்போது அவரை வழிமறித்த முத்துராமலிங்கம் சொத்தை பிரித்துத் தருமாறு கேட்டு வலியுறுத்தினாராம். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முத்துராமலிங்கம், சரவணப்பாண்டியனை தாக்கியதோடு மிரட்டல் விடுத்தாராம். இதில், சரவணப்பாண்டியன் காயமடைந்தார். புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனர்.