கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் நாளை ஸ்ரீராம நவமி விழா
By DIN | Published On : 12th April 2019 07:19 AM | Last Updated : 12th April 2019 07:19 AM | அ+அ அ- |

உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் சனிக்கிழமை(ஏப்.13) ஸ்ரீ ராம நவமி விழா நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 8 மணிக்கு விநாயகர் பூஜை, மங்கள ஆரத்தி, கூட்டுப் பஜனை, அபிஷேகம், சிறப்பு ஆராதனை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் தங்கள் பங்களிப்பை செலுத்த விரும்பும் பக்தர்கள் 98400 38499 என்ற செல்லிடபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம். ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.