கயத்தாறில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி வியாபாரி தற்கொலை மிரட்டல்
By DIN | Published On : 12th April 2019 07:21 AM | Last Updated : 12th April 2019 07:21 AM | அ+அ அ- |

கயத்தாறில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வியாபாரியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு - கடம்பூர் சாலையில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி கோபுரத்தில் ஒருவர் வியாழக்கிழமை ஏறி நின்றுகொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தாராம். இந்த தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையிலான போலீஸார், அங்கு சென்று அந்த நபரிடம் சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தி கீழே இறங்கச் செய்தனர்.
விசாரணையில், பன்னீர்குளம் நடுத் தெருவைச் சேர்ந்த பேச்சுமுத்து மகன் கருப்புக்கட்டி வியாபாரி முத்துப்பாண்டி(42) என்பதும், கடன் தொல்லையால் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.