காயல்பட்டினம் துளிர் சிறப்புப் பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கு
By DIN | Published On : 12th April 2019 07:23 AM | Last Updated : 12th April 2019 07:23 AM | அ+அ அ- |

காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் மாற்றுத்
திறனாளி வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சித்தி ரம்ஜான் வரவேற்றார்.
பயிற்சி ஆட்சியர் அனு , வாவு வஜிஹா மகளிர் கல்லூரி முதல்வர் வாசுகி, கல்லூரி மாணவிகள், துளிர் பணியாளர் கார்த்திக் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் காயல்பட்டினம் முஸ்லிலிம் ஐக்கிய பேரவைத் தலைவர் அபுல்ஹசன் கலாமி, பள்ளி புரவலர்கள் உஜைர், முஸ்தபா, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் விழிப்புணர்வு பாடல்களுக்கு பள்ளிக்கு குழந்தைகள் நடனமாடினர். காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் முருகன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை துளிர் நிறுவனர் அஹமது மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பணியாளர்கள் செய்திருந்தனர்.