திருச்செந்தூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 66 ஆயிரத்து 250 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி தொழிலாளர் துறை ஆய்வாளரும், பறக்கும் படை அலுவலருமான பாலகணேசன் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாபுராஜ் உள்ளிட்ட பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி, சோதனையிட்ட போது, ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலத்தை சேர்ந்த கள்ளப்பிரான் மகன் அம்மமுத்து என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ. 66 ஆயிரத்து 250 வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.