மோட்டார்சைக்கிள் பேரணியுடன் பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளர்கள்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மற்றும் விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மற்றும் விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை மோட்டார் சைக்கிள் பேரணியுடன் செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தனர்.
பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சிதம்பரநகரில் இருந்து பிரசாரத்தை தொடங்கி, பிரையன்ட்நகர், போல்டன்புரம், காமராஜ் கல்லூரி, அந்தோணியார் கோயில், வி.இ. சாலை, பழைய பேருந்து நிலையம், பழைய மாநகராட்சி அலுவலகம், 1 ஆம் ரயில்வே கேட், திரேஸ்புரம், போல்பேட்டை வழியாக சென்று அண்ணாநகர் 7 ஆவது தெருவில் நிறைவு செய்தார்.
அவருடன் அதிமுக தெற்கு மாவட்டச் செயலர் எஸ்.பி. சண்முகநாதன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் விபிஆர் ரமேஷ், தேமுதிக மாவட்டச் செயலர் ஆறுமுகநயினார், சமக மாவட்டச் செயலர் வில்சன், அதிமுக பகுதி செயலர்கள் பி. சேவியர், ஏ. முருகன், பொன்ராஜ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
திமுக வேட்பாளர்: கனிமொழி செவ்வாய்க்கிழமை காலை தூத்துக்குடி வட்டக்கோவில் பகுதியில் இருந்து தனது பிரசார பயணத்தை தொடங்கி அம்பேத்கர் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, குறிஞ்சி நகர், போல்பேட்டை மேற்கு, பாளையங்கோட்டை சாலை, பழைய பேரூந்து நிலையம், குருஸ் பர்னாந்து சிலை, அந்தோணியார் கோவில், ஜெயராஜ் ரோடு வழியாக புதிய பேருந்து நிலையத்தில் முடித்தார். தொடர்ந்து, கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  பின்னர்,சாத்தான்குளம், ஆறுமுகனேரி பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின்போது, திமுக மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் கே.எஸ். அர்ஜூனன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் அகமது இக்பால், வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலர் கிதர் பிஸ்மி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி மீராஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அமமுக வேட்பாளர்: புவனேஸ்வரன் வி.இ. சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றார். தொடர்ந்து, குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர் தூத்துக்குடி 3 ஆவது மைல் பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அவருடன், மாவட்டச் செயலர் இரா. ஹென்றி தாமஸ், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் காதர், அமமுக நிர்வாகிகள் செல்வக்குமார், ரமேஷ் கிருஷ்ணன், மணிகண்டன் உள்ளிட்டோர் சென்றனர். 
அனைத்து வேட்பாளர்களும் பிரசாரத்துக்கு சென்றபோது நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் முன்னால் அணிவகுத்துச் சென்றனர்.
விளாத்திகுளம் பேரவைத் தொகுதி: விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அதிமுக வேட்பாளர் பி. சின்னப்பன், வைப்பாற்று பாலத்துக்கு அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக அனைத்து தெருக்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தார்.
பின்னர் மீனாட்சி அம்மன் கோயில் முன்பு தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார். அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜு, அமைப்புச் செயலர்கள் சி.த. செல்லப்பாண்டியன், என். சின்னத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளர் ஏ.சி. ஜெயக்குமார் வைப்பாற்று பாலத்துக்கு அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து கட்சியினருடன் விளாத்திகுளம் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சென்று, விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோயில் முன்பு பிரசாரத்தை நிறைவு செய்தார். 
அவருடன் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பெ. கீதாஜீவன் எம்எல்ஏ  மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
அமமுக வேட்பாளர் ஜோதிமணி விளாத்திகுளம் நகர பகுதி, எட்டயபுரம் பகுதிகளில் பிரசாரம் செய்தார். இறுதியாக புதூரில் முருகன் கோயில் முன்பு பிரசாரத்தை  நிறைவு செய்தார். அவருடன் ஒன்றியச் செயலர் ரூபன் வேலவன், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான சுயேச்சை வேட்பாளர் மார்க்கண்டேயன் ஆயிரக்கணக்கான மக்களுடன் விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோயில் முன்பு பிரசாரத்தை தொடங்கி நாகலாபுரம் புதூரில் தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com