ஓட்டப்பிடாரம் தொகுதி வாக்காளர்களுக்கு ஆட்சியர் கடிதம்: ஜனநாயக கடமையாற்ற வேண்டுகோள்

இடைத்தேர்தல் நடைபெறும் ஓட்டப்பிராடம் சட்டப்பேரைவத் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு

இடைத்தேர்தல் நடைபெறும் ஓட்டப்பிராடம் சட்டப்பேரைவத் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு ஜனநாயக கடமையாற்றுங்கள் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கடிதம் அனுப்பியுள்ளார்.
ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி சவேரியார்புரம் புனித சவேரியார் தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். மேலும், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளித்த  ஆட்சியர் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.
மேலும், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என்ற கடிதத்துடன் கூடிய விழிப்புனர்வு துண்டுப் பிரசுரங்களை அவர் பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், இந்த கடிதத்தை ஓட்டப்பிடாரம் தொகுதிக்குள்பட்ட வாக்காளர்களுக்கு விநியோகிக்க உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த கடிதத்தில், மே 19 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் வாக்காளர்கள் அனைவரும் தாங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் சென்று வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com