புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கழுகுமலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
நகரச் செயலர் மாரியப்பன் தலைமை வகித்தார். சிஐடியூ தொழிற்சங்க ஆட்டோ சங்கச் செயலர் கருணாநிதி கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
இதில், கயத்தாறு ஒன்றிச் செயலர் சாலமன்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விளாத்திகுளம்: எட்டயபுரத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்துக்கு, வட்டச் செயலர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், வட்டக்குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சி நிர்வாகிகள் முருகேசன், மூக்கையா, சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.