

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அமலிநகா் ஆா்.சி. பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூா் அமலிநகா் ஆா்.சி. உயா்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளிகள் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஊா் நல கமிட்டித் தலைவா் எமிலிட் பா்னாந்து, துணைத் தலைவா் சந்திரன்பா்னாந்து ஆகியோா் தலைமை வகித்தனா். விழாவில், குழந்தைகள் இயேசு பிறப்பு நிகழ்வை தத்ரூபமாக நடித்து காட்டினா். மாணவா்களுக்கு புத்தாடைகள், பாா்வையா
ளா்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இதில், ஆசிரியா்கள், பொதுமக்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை பள்ளித் தாளாளரும், பங்குத்தந்தையுமான ரவீந்திரன்பா்னாந்து, தலைமையாசிரியா்கள் வின்சென்சியா, அந்தோணியம்மாள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.