சிவகாசி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
By DIN | Published On : 06th February 2019 12:41 AM | Last Updated : 06th February 2019 12:41 AM | அ+அ அ- |

சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். இயக்குநர் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைச்சாமி கருத்தரங்கைத் தொடக்கி வைத்தார். துறைத் தலைவர் மாதவன் அறிமுக உரையாற்றினார்.
இதில் துபை நாட்டில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக உள்ள கற்குவேல்ராஜா பங்கேற்றுப் பேசியது: மாணவர்கள் தங்களை வேலைக்குத் தகுதியுள்ளவர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். வகுப்பறையில் படிப்பதோடு மட்டுமல்லாமல், நூலகங்களுக்கும் சென்று படிக்க வேண்டும். தினமும் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நேர்காணலுக்கு தைரியமாக செல்லலாம். தொழில்முனைவோராகி வெற்றி பெற வேண்டும். எந்தத் தொழில் செய்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என ஆய்வு செய்து அதில் ஈடுபட வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். வெற்றிபெற ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல ஊதியத்தில் வேலைபார்க்க வேண்டும் என எண்ணும் மாணவர்கள், அந்த வேலைக்குத் தங்களைத் தகுதியுள்ளோராக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...