ரயிலில் அடிபட்டு முதியவர் பலத்த காயம்
By DIN | Published On : 06th February 2019 12:42 AM | Last Updated : 06th February 2019 12:42 AM | அ+அ அ- |

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது ரயில் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
கோவில்பட்டி வேலாயுதபுரம் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் சி.பொன்னுத்துரை(63). பிளாஸ்டிக் குடம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வரும் இவர் புதுகிராமத்திலிருந்து வேலாயுதபுரம் செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றாராம். அப்போது சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் ரயில் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...