கோவில்பட்டியில் ஊராட்சி சபைக் கூட்டம்
By DIN | Published On : 12th February 2019 04:45 AM | Last Updated : 12th February 2019 04:45 AM | அ+அ அ- |

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் துறையூர், தீத்தாம்பட்டி, கரிசல்குளம் மற்றும் விஜயாபுரி கிராமப் பகுதிகளில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது.
மேற்கு ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகர திமுக செயலர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி ரவிக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ், சோலையப்பன், குழந்தைராஜ், வெயிலுமுத்து, ராஜன்பாபு, அய்யப்பன், செந்தூர்பாண்டி, முருகன், முத்துராஜ், குருசாமி உள்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.