சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டாம்: ஆட்சியர்
By DIN | Published On : 12th February 2019 04:47 AM | Last Updated : 12th February 2019 04:47 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு உருளைக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டாம் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.719.50 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.717.50 ஆகவும், கழுகுமலையில் ரூ.726.50 ஆகவும், கயத்தாறில் ரூ.729.50 ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.718 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.736.50 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.719.50 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.719.50 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடம் இருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கிலோ) குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.