சாகுபுரத்தில் பாதுகாப்பு வார விழா
By DIN | Published On : 12th February 2019 04:50 AM | Last Updated : 12th February 2019 04:50 AM | அ+அ அ- |

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் பாதுகாப்பு துறையின் சார்பாக சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.
நிறுவனத்தின் செயல் உதவித் தலைவர் ஆர்.ஜெயக்குமார் (பணியகம்) தலைமை வகித்து, தூத்துக்குடி- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டும் பணியை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் மூத்த பொது மேலாளர்கள், பொதுமேலாளர்கள் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கலந்துகொண்டனர்.