நங்கைமொழி கோயிலில் நாளை ராகு-கேது பெயர்ச்சி விழா
By DIN | Published On : 12th February 2019 04:49 AM | Last Updated : 12th February 2019 04:49 AM | அ+அ அ- |

மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசன்னாம்பிகை சமேத காளத்தீசுவரர் திருக்கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா புதன்கிழமை(பிப்.13) நடைபெறுகிறது.
1400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், ராகு-கேது பரிகார ஸ்தலமாகவும் திகழும் இத்தலத்தில் ராகு-கேது பெயர்ச்சி விழாவை, காலை 9 மணிக்கு கும்ப பூஜை, 9.30 மணிக்கு நவக்கிரக ஹோமம், 10 மணிக்கு கோமாதா பூஜை, 10.30 மணிக்கு பூர்ணாஹுதி, முற்பகல் 11 மணிக்கு சுமங்கலி பூஜை, அபிஷேகம், பகல் 1 2 மணிக்கு தீபாராதனை, அன்னதானம் ஆகியன நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.