திருச்செந்தூரில் சமுதாய நலக்கூடம், காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்: கனிமொழி அடிக்கல் நாட்டினார்
By DIN | Published On : 22nd February 2019 06:51 AM | Last Updated : 22nd February 2019 06:51 AM | அ+அ அ- |

திருச்செந்தூர் அமலிநகரில் சமுதாய நலக்கூடம், காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கட்டடம் கட்டுவதற்கு மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி அடிக்கல் நாட்டினார்.
திருச்செந்தூர் 12ஆவது வார்டு பகுதியான அமலிநகரில் சமுதாய நலக்கூடம் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா அமலிநகரில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை ரவீந்திரன் தலைமை வகித்தார். ஊர்நல கமிட்டி சந்திரன் வரவேற்றார். திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திட்டத்துக்கான கல்வெட்டை திறந்துவைத்து கனிமொழி பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் ராஜ்குமார், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், துணை அமைப்பாளர்
பை.மூ.ராமஜெயம், மாவட்ட கழக துணைச் செயலர் பெல்சி பிளாரன்ஸ், திருச்செந்தூர் நகரப் பொறுப்பாளர் சுடலை, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, துறைமுகம் புளோரன்ஸ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகரப் பொறுப்பாளர் நம்பிராஜன், நகர துணைச் செயலர் ஆனந்த ராமச்சந்திரன், வார்டு செயலர் அமலன், அமலிநகர் ஊர்நல கமிட்டி செயலர் கலைச்செல்வன், நிர்வாக குழு உறுப்பினர் தஸ்நேவிஸ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். ஊர்நல கமிட்டி தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.
முன்னதாக, அமலிநகர் ஊர்மக்கள் சார்பில் கனிமொழிக்கு நினைவுப் பரிசாக சிறிய மாதிரி பைபர் படகும், அமலிநகர் மறைந்த தியாகி பெஞ்சமின் வாழ்க்கை வரலாறு நூலும் வழங்கப்பட்டது.
காயல்பட்டினத்தில்... காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கட்டடம் கட்ட தனது மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 75 லட்சத்தை கனிமொழி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான அடிக்கல் நாட்டு விழா காயல்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோமான் மொட்டையார் தெருவில் அமையவுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் எஸ்.ஏ.காதர், உமரிசங்கர், மாநில மாணவரணி துணைச் செயலர் உமரிசங்கர், ஜக்கிய பேரவை தலைவர் அபுல் ஹஸன் கலாமி, செயலர் வாவு சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கனிமொழி அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.
முன்னதாக, முகைதீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். திமுக நகரச் செயலர் முத்து வரவேற்றார். எம்.எம்.சாகுல் ஹமீது தொகுத்து வழங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த காயல் மகபூப், ஐக்கிய பேரவையைச் சேர்ந்த எஸ்.இஅமானுல்லாஹ், கோமான் தெரு ஜமாத் பொருளாளர் அப்துல் கரீம், டி.பி.எம்.மைதீன்கான் எம்எல்ஏ ஆகியோர் பேசினர்.
முன்னதாக காயல்பட்டினம் லட்சுமிபுரத்தில் திமுக கொடியை கனிமொழி ஏற்றி வைத்தார். காயல்பட்டினம் நகராட்சிக்கு எதிர்புறம் அமைந்த திறந்த வெளியில் மகளிருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பின்னர், காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியிலும் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.