செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதை எதிர்த்து முற்றுகை
By DIN | Published On : 04th January 2019 12:37 AM | Last Updated : 04th January 2019 12:37 AM | அ+அ அ- |

கோவில்பட்டி திட்டங்குளம் ஊராட்சி, முத்துநகர் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
முத்துநகர் பகுதியில் தனியார் நிறுவனம் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்து வருகிறதாம். இங்கு கோபுரம் அமைப்பதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, அப்பகுதி மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். பின்னர், கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு அளித்துவிட்டு கலைந்துசென்றனர்.