தொழிலாளி மர்மச் சாவு
By DIN | Published On : 04th January 2019 12:41 AM | Last Updated : 04th January 2019 12:41 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தொழிலாளி வியாழக்கிழமை இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள திருவரங்கநேரி கீழத்தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் முத்துராஜ்(39).இவருக்கு மனைவி அனிதா மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். முத்துராஜ், அப்பகுதியில் உள்ள மதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். புதன்கிழமை இரவு தோட்டத்திற்கு சென்ற இவர், வியாழக்கிழமை காலை தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தாராம். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்
பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜாசுந்தர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.