உடன்குடியில் பஜனை குழுக்கள் சங்கமம்
By DIN | Published On : 07th January 2019 06:21 AM | Last Updated : 07th January 2019 06:21 AM | அ+அ அ- |

பாரதமாதா சேவா சங்கம் சார்பில் உடன்குடி ஒன்றியத்துக்குள்பட்ட மார்கழி மாத பஜனைக் குழுக்களின் சங்கமம் வைத்திலிங்கபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் நடைபெற்றது.
இந்த பஜனை சங்கமம் நிகழ்ச்சியில் பிச்சிவிளை, காரங்காடு, வில்லிகுடியிருப்பு, சிவல்விளைபுதூர், பெருமாள்புரம், நயினார்பத்து உள்ளிட்ட 12 கிராமங்களின் பஜனைக் குழுவினர் கலந்து கொண்டனர். இதையொட்டி முக்கிய வீதிகள் வழியாக பஜனை ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாலன் தலைமை வகித்தார். பஜனையை சாத்தான்குளம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் நடத்தினர். இந்து சமய பெருமைகள், இந்து ஒற்றுமை குறித்து தேசிய பேச்சாளர் சந்திரசேகர் பேசினார்.