சாத்தான்குளம் ஸ்ரீபெருமாள் கோயிலில் ஆஞ்சநேயர் ஜயந்தி
By DIN | Published On : 07th January 2019 06:28 AM | Last Updated : 07th January 2019 06:28 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீபெருமாள் கோயிலில் ஆஞ்சநேயர் ஜயந்தியை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சாத்தான்குளம் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. பின்னர்,கோயில் வளாகத்திலுள்ள ஆளுயர ஆஞ்சநேயருக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், வெற்றிலை உள்பட 108 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
பக்தர்களுக்கு ஸ்ரீஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.