மெட்டில்பட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 07th January 2019 06:27 AM | Last Updated : 07th January 2019 06:27 AM | அ+அ அ- |

புதூர் அருகே மெட்டில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நெகிழிக்கு மாற்றாக துணிப்பைகளையும், உலோகத்தால் ஆன குடிநீர் பாட்டில்களையும் மாணவ, மாணவியருக்கு வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர், கிராம மக்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர், பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள காய்கனி தோட்டத்தை ஆட்சியர் திறந்துவைத்துப் பார்வையிட்டார். கல்விப் புரவலர்களின் கல்வெட்டும் திறந்துவைக்கப்பட்டது.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.தனபதி, வருவாய் கோட்டாட்சியர் விஜயா, புதூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், வசந்தா உள்பட பலர் கலந்துகொண்டனர்.