கயத்தாறு தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், விவேகானந்தா கேந்திரம் மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமுக்கு ஓய்வுபெற்ற கல்வித் துறை அதிகாரி உச்சிமகாளி தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கிவைத்தார்.
மருத்துவர் அனுராதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 125 பேருக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 21 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
முகாமில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை மணிமேகலை, கேந்திர சகோதரி ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில்பட்டி கேந்திர பொறுப்பாளர் பரமகுரு செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.