கோவில்பட்டியில் ஏழைகளுக்கு நல உதவிகள்
By DIN | Published On : 03rd July 2019 06:55 AM | Last Updated : 03rd July 2019 06:55 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் மத்திய நகர் அரிமா சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு, நல உதவிகள் வழங்குதல் என இருபெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, முன்னாள் அரிமா சங்கத் தலைவர் குருமூர்த்தி தலைமை வகித்தார். அரிமா சங்க நிர்வாகிகள் ஜஸ்டீன்பால், ஜெகநாதன், சீனிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க நிர்வாகிகள் ராம்அன்பரசன், சுப்பையா, காஜாமுகைதீன், சுரேஷ்குமார், ராஜ்குமார் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து, 2019 - 2020 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. தலைவராக அந்தோணிசாமி, செயலராக ராமச்சந்திரன், பொருளாளராக வன்னியன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர், பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், ஏழை, எளியோருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டன. இதில், மத்திய நகர் அரிமா சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.