பனைமர விதைகள் நடும் பணி
By DIN | Published On : 30th July 2019 07:42 AM | Last Updated : 30th July 2019 07:42 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் பனைமர விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.
நிலத்தடி நீரை பாதுகாக்கவும், அழிந்துவரும் கருப்பட்டி தொழிலை காப்பாற்றவும், ஏழை, எளிய பெண்கள் வாழ்க்கை திறனை மேம்படுத்தப்பகூடிய பாய்முனைதல், பெட்டிசெய்தல் போன்ற தொழிலை வளர்க்கவும், பதனீர் உற்பத்தியை ஊக்குவிக்கவும், பனைமரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கவும் திருச்செந்தூர் நல்வாழ்வு சமூக சேவை நிறுவனம் சார்பில் திருச்செந்தூர், நத்தக்குளம் வடிகால் பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் நல்வாழ்வு சமூக சேவை நிறுவன நிர்வாக இயக்குநர் கணேசன் தலைமை வகித்தார். வழக்குரைஞர் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தார். அலுவலர்கள் சுப்புதுரை, இசக்கிபாலன், இசக்கிசெல்வன், சிவநாதன், மாசானமுத்து, நூலகர் மாதவன், சுப்பிரமணியன், காங்கிரஸ் பிரமுகர் சேதுராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.