தரமற்ற உணவுப் பொருள் விற்பனை: கடை உரிமையாளருக்கு அபராதம்
By DIN | Published On : 09th June 2019 12:55 AM | Last Updated : 09th June 2019 12:55 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் தரமற்ற, பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்ததாக, கடை உரிமையாளர் மற்றும் விற்பனையாளருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோவில்பட்டி - சாத்தூர் பிரதான சாலையில் உள்ள இனிப்பகத்தில் 9.9. 2018இல் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி, உணவுப் பொருள்களை மாதிரிக்கு எடுத்து, பகுப்பாய்வுக்கு அனுப்பினர். அதில், பாதுகாப்பற்ற, தரமற்ற உணவுப் பொருள்கள் என்பதற்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றதாம். இதையடுத்து, கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர், அந்த கடை விற்பனையாளர் கு.கணேசன்(35) மற்றும் உரிமையாளர் க.ராஜ்குமார்(49) ஆகியோருக்கு தலா ரூ.10ஆயிரம் அபராதமும், நீதிமன்றம் கலையும் வரை சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.