மாவட்ட கால்பந்து: தூத்துக்குடி அணி வெற்றி
By DIN | Published On : 09th June 2019 12:56 AM | Last Updated : 09th June 2019 12:56 AM | அ+அ அ- |

ஆத்தூர் அருகே புன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியின், தொடக்க ஆட்டத்தில் தூத்துக்குடி யங்ஸ்டர்ஸ் கால்பந்தாட்ட கழக அணி வெற்றி பெற்றது.
புன்னைக்காயல் புனித ஜோசப் காலபந்தாட்டக் கழகம் சார்பில் 46ஆவது ஆண்டு மனுவேல் பிஞ்ஞயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
போட்டியை ஊர் நல கமிட்டி தலைவர் செல்ட்டன், துறைமுக கமிட்டி தலைவர் இளங்கோ மச்சாது, கூட்டுறவு சங்கத் தலைவர் ராயப்பன், கோயில் கமிட்டி தலைவர் டெலிக்கேட் லோபோ ஆகியோர் முன்னிலையில், பங்குத்தந்தை கிஷோக் அடிகளார் தொடங்கிவைத்தார்.
அணி வீரர்களை புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகத் தலைவர் யூஜின் ரொட்ரிகோ, செயலர் எஸ்.ஜோசப் பர்ணாந்து ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
முதல் போட்டியில் தூத்துக்குடி யங்ஸ்டர்ஸ் கால்பந்தாட்டக் கழக அணியும், வீரபாண்டியன்பட்டினம் பட்டணம் இளைஞர் மன்ற அணியும் மோதின. ஆட்ட நேரம் முழுவதும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. பின்னர் டை பிரேக்கர் முறையில் தூத்துக்குடி யங்ஸ்டர்ஸ் கால்பந்தாட்டக் கழக அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.