தூத்துக்குடியில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th June 2019 06:52 AM | Last Updated : 14th June 2019 06:52 AM | அ+அ அ- |

தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் பயிலும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜாய்சன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இசக்கிபாண்டி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.