சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் பெற்றோர், வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால்

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ் எச்சரித்துள்ளார். 
கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, காமநாயக்கன்பட்டி, இளையரசனேந்தல், கொப்பம்பட்டி, நாலாட்டின்புத்தூர் ஆகிய பகுதிகளில் நிகழும் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் போலீஸார் தொடர்ந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 இந்நிலையில்,  காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமையில், காவல் நிலைய ஆய்வாளர்கள் அய்யப்பன் ( மேற்கு),  சுதேசன் (கிழக்கு), போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நாராயணன் மற்றும் போலீஸார் பள்ளி வேலை நேரம் முடிந்து செல்லும்போது ஆங்காங்கே நின்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 
  அப்போது, எவ்வித ஆவணமுமின்றி மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற சிறுவர்களை நிறுத்தி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களை வரவழைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் முன்னிலையில், பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள், வாகனம் ஓட்டிய சிறுவர்கள் ஆகியோர் வாகன ஓட்டுநர் உரிமமின்றி வாகனங்களை ஓட்ட மாட்டோம் என்றும், விலை மதிப்பிட முடியாத உயிரைப் பாதுகாக்க சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடப்போம் என்று கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 
பின்னர் பெற்றோர்கள் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com