கஞ்சா கடத்தியதாக இளைஞர் கைது
By DIN | Published On : 22nd March 2019 07:00 AM | Last Updated : 22nd March 2019 07:00 AM | அ+அ அ- |

காயல்பட்டினத்தில் கஞ்சா கடத்தியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் பத்திரகாளி தலைமையில் போலீஸார் ஆறுமுகனேரி- காயல்பட்டினம் புறவழிச்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த இளைஞர் வந்த மோட்டார் சைக்கிளில் 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்ததாம். விசாரணையில், அவர் காயல்பட்டினம் சீதக்காதிநகர் முகமதுஅலி ஜின்னா மகன் முகம்மது யூசுப் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...