தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
By DIN | Published On : 22nd March 2019 07:04 AM | Last Updated : 22nd March 2019 07:04 AM | அ+அ அ- |

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி, விளாத்திக்குளம், கோவில்பட்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுகிகளில் 3 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, விளாத்திக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.சி. ஜெயக்குமார் ஆகியோரை அறிமுகம் செய்யும் வகையில் செயல்வீரர்கள் கூட்டம் 3 இடங்களில் நடைபெறுகிறது.தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 23) தூத்துக்குடி அபிராமி மஹாலில் காலை 10 மணிக்கும், 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு விளாத்திக்குளம் சோலை மஹாலிலும், 27 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்திலும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...