அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 05th May 2019 01:13 AM | Last Updated : 05th May 2019 01:13 AM | அ+அ அ- |

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி வடக்குப் பகுதியில் உள்ள பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்குச் சாவடி அதிமுக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்து பேசினார்.
கூட்டத்தில், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலர் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். முருகையா பாண்டியன், ஐ.எஸ். இன்பதுரை, எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சக்திவேல் முருகன், தூத்துக்குடி மாவட்ட அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலர் யு.எஸ். சேகர், மாநகரப் பகுதிச் செயலர்கள் பி. சேவியர், ஏ. முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.