ஓட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி பிரசாரம்
By DIN | Published On : 05th May 2019 01:13 AM | Last Updated : 05th May 2019 01:13 AM | அ+அ அ- |

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த பேரவைத் தொகுதிக்குள்பட்ட வி.கோவில்பத்து, இசக்கியம்மன் கோயில், கீழ நாட்டார்குளம், கொள்ளீர்குளம், முத்தாலங்குறிச்சி, வள்ளுவர் காலனி, அனவரதநல்லூர், வசவப்பபுரம், அம்பேத்கர் காலனி உள்பட கருங்குளம் ஒன்றியப் பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின்போது அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், அய்யாத்துரைபாண்டியன், புதிய தமிழகம் கட்சி திண்டுக்கல் மாவட்டச் செயலர் இளையராஜா, மாவட்டச் செயலர் செல்லத்துரை, கண்ணன், ஒன்றியப் பொறுப்பாளர்கள் தங்கராஜ், கனி, சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.