காயல்பட்டினத்தில் விளையாட்டுவீரர்களுக்கு இலவச சீருடை அளிப்பு
By DIN | Published On : 05th May 2019 01:12 AM | Last Updated : 05th May 2019 01:12 AM | அ+அ அ- |

காயல்பட்டினத்தில் விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
வி யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், காயல் பிரீமியர் லீக் கால்பந்து சுற்றுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் விளையாட்டுச் சீருடை (ஜெர்ஸி) வழங்கும் விழா, கடற்கரை அருகே உள்ள வி.எம்.எஸ்.லெப்பை விளையாட்டரங்கில் நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிலிம் ஐக்கிய பேரவைத் தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ தலைமை வகித்தார். ஜெ.ஏ.லரீஃப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முஸ்லிலிம் ஐக்கிய பேரவை செயலர் எம்.எம்.ஷம்சுத்தீன், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், சாமு ஷிஹாபுத்தீன், எல்.கே.மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மீராத்தம்பி ஆகியோர் அணிகளின் வீரர்களுக்கு சீருடைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அண்மையில் அகால மரணமடைந்த விளையாட்டு வீரர் முஹம்மத் ஜமாலுத்தீன் மறைவுக்கு அஞ்சலிலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் கிளப் செயலர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக் தம்பி, எஸ்.இ.அமானுல்லாஹ், அக்குஹீலர் எஸ்.கே.ஸாலிலிஹ், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோர் மாணவர்களிடையே பேசினர். ஏற்பாடுகளை, வி.எம்.எஸ். லெப்பை விளையாட்டரங்க மேலாளர் எம்.ஜஹாங்கீர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.