நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
By DIN | Published On : 05th May 2019 01:14 AM | Last Updated : 05th May 2019 01:14 AM | அ+அ அ- |

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் 18ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் எப். சகாய ஜோஸ் தலைமை வகித்தார். சாத்தான்குளம் கல்விக் கழகச் செயலர் ஆர். ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். கல்லூரித் தாளாளர் ஏ.ஆர். சசிகரன் வரவேற்றார். எல். வனிதாராணி ஆபிரகாம் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் எஸ். ஜெயக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
முன்னாள் எம்.பி. ஏ.டி.கே. ஜெயசீலன், திருமண்டில பெருமன்ற உறுப்பினர் டி. பில்லிகிரஹாம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பல்கலைக்கழக தேர்வு, திறனாய்வுத் தேர்வு மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள், தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. இதில், திருமண்டில பெருமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாமல்லன், ஏ.செல்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.