நாளைய மின்தடை
By DIN | Published On : 05th May 2019 01:16 AM | Last Updated : 05th May 2019 01:16 AM | அ+அ அ- |

கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் மின் தொடர் அமைந்துள்ள பகுதியில் திங்கள்கிழமை (மே 6) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் எம்.சகர்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோவில்பட்டி நகர் கிழக்கு விநியோக பிரிவுக்குள்பட்ட வடக்கு திட்டங்குளம் மின் தொடரில் அமைந்துள்ள எட்டயபுரம் சாலை, திருவள்ளுவர் ஐ.டி.ஐ. அருகிலுள்ள மின் கம்பங்கள் மாற்றும் பணி நடைபெறவுள்ளன. எனவே தொழில்பேட்டை, கணேஷ் நகர், திட்டங்குளம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.