அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 05th May 2019 01:13 AM | Last Updated : 05th May 2019 01:13 AM | அ+அ அ- |

உடன்குடி ஒன்றிய, நகர அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநில ஜெயலலிதா பேரவைச் செயலர் மாரியப்பன் கென்னடி தலைமை வகித்தார். மாநில இளைஞர் பாசறை இணைச் செயலர் பி.ஆர்.மனோகரன், கலை, இலக்கிய அணி மாநிலச் செயலர் துரை, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓட்டப்பிடாரம் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், ஒன்றியச் செயலர் அம்மன் நாராயணன், நகரச் செயலர் கோயில்மணி, பொதுக்குழு உறுப்பினர் திருப்பாற்கடல், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் மனோஜ், ஒன்றிய இலக்கிய அணி செயலர் முத்துப்பாண்டியன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...