ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் இதுவரை ரூ. 1.50 கோடி பறிமுதல்: ஆட்சியர்

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை ரூ. 1.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை ரூ. 1.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
 தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:  ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 70 சதவீத வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன.
   மாற்றுத் திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து ஏற்பாடு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
   ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் ஏறத்தாழ 1500 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற வகையில் வாக்காளர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
 தொடர்ந்து,  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
 நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகேசன், மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் ஜெயசீலா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நம்பிராஜன் மற்றும் மாற்றுத்திறானாளிகள் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com