கிராமங்களில் ஸ்டாலின் திண்ணைப் பிரசாரம்

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எம்.சி. சண்முகையாவை ஆதரித்து இரண்டாம்கட்டமாக மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விமான நிலையம் அருகேயுள்ள ராமச்சந்திரபுரம், ஜக்கம்மாள்புரம் காமராஜ்நகர், கூட்டாம்புளி ஆகிய கிராமங்களுக்குச் சென்ற ஸ்டாலின் அந்தப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். வீடு வீடாகச் சென்று திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த அவர், அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளின் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களோடு பேசினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என பொதுமக்களிடம் அவர் தெரிவித்தார்.
பிரசாரத்தின்போது, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என பலர் ஸ்டாலினுடன் செல்லிடப்பேசியில் சுயபடம் (செல்ஃபி) எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, தனியார் விடுதிக்கு சென்ற அவர், மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என். நேரு, கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலர் எஸ். ஜோயல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com