தச்சமொழி சுடலைமாட சுவாமி கோயிலில் நாளை வருஷாபிஷேகம்
By DIN | Published On : 15th May 2019 06:48 AM | Last Updated : 15th May 2019 06:48 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை(மே 16) நடைபெறுகிறது.
சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயிலில் ஸ்ரீசக்திஅம்மன், சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை , மூர்த்தி ஹோமம், அஸ்த்ர ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 10.30மணிக்கு விமான அபிஷேகம், ஸ்ரீசக்தி அம்மன், ஸ்ரீசுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், வருஷாபிஷேக மகா கும்பாபிஷேகம் , தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெறுகிறது. பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுத் தலைவர் க. கணபதி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.