தச்சமொழி வீரசூர பெருமாள் கோயில் கொடை விழா
By DIN | Published On : 19th May 2019 07:52 AM | Last Updated : 19th May 2019 07:52 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த வீரசூர பெருமாள் சுவாமி கோயில் கொடை விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, பொங்கல் வைத்தல், இரவு 10 மணிக்கு கிடா வெட்டுதல், சிறப்பு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி வேட்டைக்கு செல்லுதல், சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அன்னதானம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் வே.கார்த்திகேசபாண்டியன், க.கணபதி, கோ.ஜெயசுந்தரராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.