ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு
By DIN | Published On : 19th May 2019 07:50 AM | Last Updated : 19th May 2019 07:50 AM | அ+அ அ- |

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு கோவில்பட்டி பயணியர் விடுதி முன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராஜீவ் ஜோதி யாத்ரா கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தொழிலாளர் துறை மற்றும் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத் தலைவர் பிரகாசம் தலைமையில், பெங்களூருவில் இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று, கன்னியாகுமரி வழியாக இம்மாதம் 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் சென்றடைகிறது.
சனிக்கிழமை கோவில்பட்டிக்கு வந்த இந்த யாத்திரைக்கு, பயணியர் விடுதி முன், திருநெல்வேலி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் உமாசங்கர், பிரேம்குமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் திருப்பதிராஜா, ராமசந்திரன், நகரத் தலைவர் சண்முகராஜா, ஒன்றியத் தலைவர் ரமேஷ்மூர்த்தி, மகளிர் காங்கிரஸ் நல்லமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.