ஆறுமுகனேரியில் மின்வாரியத்தால் மாற்றுச்சேவைக்கு கழற்றிச் செல்லப்பட்ட மின்மாற்றியை மீண்டும் பொருத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆறுமுகநேரி கே.டி.கோசல்ராம் மண்டபத்திற்கு மேல்புறம், சோமசுந்தரியம்மன் கோயில் தெருவில் 250 கே.வி கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு மாதத்திற்கு முன்பு ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தில் மின்மாற்றி பழுதாகிவிட்டதென, சோமசுந்தரியம்மன்கோயில் தெருவில் உள்ள மின்மாற்றியை கழற்றிச்சென்று அங்குள்ள நிலைமையைச் சமாளித்துள்ளனா்.
தற்போது சோமசுந்தரியம்மன்கோயில் தெருவில் உள்ள மின்மாற்றியை பொருத்தாமல் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆறுமுகனேரி வாரசந்தைக்கு பின்புறம் உள்ள மின்மாற்றியுடன் இணைத்துள்ளனா். இதனால் அதிக மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றி சூடாகி அடிக்கடி மின் தடை ஏற்படுகிாம்.
எனவே, சோமசுந்தரியம்மன்கோயில் தெருவில் இருந்த இடத்திலிருந்த மின்மாற்றியை மீண்டும் பொருத்தி சீரான மின் விநியோகம் சீராக கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.