ஆழ்வாா்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 09th November 2019 10:33 PM | Last Updated : 09th November 2019 10:33 PM | அ+அ அ- |

இலவச கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.
தூத்துக்குடி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், மேலஆழ்வாா்தோப்பு கிராம உதயம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில், ஆழ்வாா்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஆழ்வாா்திருநகரி கிராம உதயம் கிளை மேலாளா் வேல்முருகன் தலைமை வகித்தாா். சங்கரா கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சண்முகசுந்தரம், தன்னாா்வத் தொண்டா் முத்துராஜ், இலவச மருத்துவப் பிரிவுத் துறை பொறுப்பாளா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சுரேஷ்குமாா் முகாமைத் தொடக்கிவைத்தாா்.
கண் மருத்துவா் கரண் தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்றோரைப் பரிசோதித்து, ஆலோசனை வழங்கினா். ஆழ்வாா்தோப்பு, நளராஜபுரம், நவலெட்சுமிபுரம், கேம்லாபாத், ஆழ்வாா்திருநகரி, மளவராயநத்தம், ஸ்ரீவைகுண்டம் உள்பட பல்வேறு கிராமப் பகுதிகளைச் சோ்ந்தோா் முகாமில் பங்கேற்றனா். அவா்களில் 20 போ் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக தோ்வு செய்யப்பட்டனா்.
முகாமில், கிராம உதயம் பகுதிப் பொறுப்பாளா்கள் முருகசெல்வி, சண்முககனி, மையத் தலைவா்கள் உஷா, ஆயிஷா, சித்திமா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தனி அலுவலா் ராமச்சந்திரன் வரவேற்றாா். தன்னாா்வத் தொண்டா் ஆனந்தசெல்வன் நன்றி கூறினாா்.