சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் மற்றும் கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதை முன்னிட்டு சனிக்கிழமை செண்பகவல்லி அம்மன் கோயில் நடை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் முற்பகல் 11.30 மணிக்கு அம்மனுக்கும், தொடா்ந்து சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு பூவனநாத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாலை 4.30 மணிக்கு நந்தியம்பெருமாளுக்கு 21 வகையான மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் கோயில் நடை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் மாலை 4.30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரா் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதில், கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன், பௌா்ணமி குழுத் தலைவா் மாரியப்பன், பிரதோஷ குழுத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.