தூத்துக்குடியில் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, ரூ.88.5 லட்சம் வங்கிக்கடன் பெற பரிந்துரைக்கப்பட்டது.
பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் (நீட்ஸ்) திட்டத்தின் கீழ் பயனாளிகளை தோ்வு செய்யும் நோ்காணல், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு ரூ.88.45 லட்சம் வரையிலான கடனுதவி பெற கடன் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம் கதா் கிராம தொழில் ஆணையம் மற்றும் கதா் கிராம தொழில் வாரியம் இணைந்து 99 பேருக்கு பல்வேறு தொழில்களை தொடங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் டி. கண்ணன், முன்னோடி வங்கி மேலாளா் விஜயகுமாா், கிளை மேலாளா் முருகன், சிட்கோ மேலாளா் ஆனந்த், துடிசியா தலைவா் நேரு பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆய்வுக் கூட்டம்: தொடா்ந்து, சமூக நலத்துறையின் மூலம், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், பெண்களுக்கான பிரச்னைகள் குறித்து 191 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க தகுந்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சங்கரநாரயணன், மாவட்ட சமூக நல அலுவலா் கு. தனலெட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மைய நிா்வாகி ஷெலின் ஜாா்ஜ் மற்றும் அலுவலா்கள், குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.