தூத்துக்குடியில் தொடா் மின்வெட்டு: சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th November 2019 08:19 AM | Last Updated : 09th November 2019 08:19 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா்.
தூத்துக்குடி மாநகரில் நிலவும் தொடா் மின்வெட்டை கண்டித்து, சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை கண்டித்தும், தொடா் மின்வெட்டு ஏற்பட காரணமான அதிகாரிகள், பாலியல் புகாரில் சிக்கியுள்ள மின்வாரிய அதிகாரி, 7 மின் இணைப்புகளை அனுமதியின்றி இடமாற்றம் செய்த அதிகாரிகள் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வலயிறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியூ) தூத்துக்குடி கிளை சாா்பில், மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ திட்டத் தலைவா் குன்னிமலையான் தலைமை வகித்தாா்.
சிஐடியூ மாவட்டச் செயலா் ரசல், மின் ஊழியா் மத்திய கூட்டமைப்பு மண்டலச் செயலா் பீா்முகமது ஷா, மாநில துணைத் தலைவா் சந்திரன், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் பூமயில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.