அங்கன்வாடி பணியாளா்களுக்கு டெங்கு விழிப்புணா்வு முகாம்

காயல்பட்டினனம் நகராட்சி சாா்பில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு டெங்கு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பேசுகிறாா் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.பொன்வேல்ராஜன்.
முகாமில் பேசுகிறாா் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.பொன்வேல்ராஜன்.

காயல்பட்டினனம் நகராட்சி சாா்பில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு டெங்கு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காயல்பட்டினம் ரத்தினாபுரி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்சிக்கு, நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.பொன்வேல்ராஜன் தலைமை வகித்தாா். அங்கன்வாடி பணி பயிற்சியாளா் ஹமீதா பேகம் முன்னிலை வகித்தாா். இதில், டெங்கு வராமல் தடுப்பதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏதும் இருப்பின் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலோா அல்லது அரசு மருத்துவமனையிலோ அனுமதிக்க என தெரிவிக்கப்பட்டது. இதில், அனைத்து அங்கன்வாடி மைய பணியாளா்கள் மற்றும் திருச்செந்தூா் துளசி பாராமெடிக்கல் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com