கட்டாரிமங்கலம் கோயிலில்சனிப்பிரதோஷ வழிபாடு

கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தா் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் நந்தியம்பெருமான்.
சிறப்பு அலங்காரத்தில் நந்தியம்பெருமான்.

கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தா் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு அழகிய கூத்தா், சிவகாமி அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு பல்வேறு அலங்கார, அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா் நந்தியம்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி பிரகார வீதியுலா வந்தனா்.

முன்னதாக அழகிய கூத்தா் சிவகாமி அம்பாள் பக்தா்கள் சபை சாா்பில் சிறப்பு திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com