படுக்கப்பத்தில் இலவச கண் மருத்துவ முகாம்
By DIN | Published On : 09th November 2019 08:18 AM | Last Updated : 09th November 2019 08:18 AM | அ+அ அ- |

உத்தம நபியின் உதய தினவிழாவை முன்னிட்டு, படுக்கப்பத்து பள்ளிவாசலில் இலவச கண்சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை பிலாலியா அரபிக் கல்லூரி விக்கிரவாண்டி கிளை, பிலாலியா உலமா பேரவை ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமை, பேராசிரியா் முஹம்மது ஷிஹாப் ஆகில் பிலாலி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். வாசன் கண் மருத்துவமனைக் குழுவினா், கண் நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினா். இதில், 300 போ் சிகிச்சை பெற்றனா்.
இதில், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ்.ஆா். ரமேஷ், தொழிலதிபா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...